Friday, October 5, 2012

ஆண்களும் தெரிந்து கொள்ளுங்கள் கருக்கலைப்பு அவசியமானதா?



மகாராஷ்டிர அரசில் கருக்கலைப்பு குறித்த தீர்ப்பு வந்தது முதலே ஊடகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அறிவுரைகள் என எங்கும் விவாதங்கள் நடந்தது.
 அதுவும் பெண்களை குற்றம் சொல்லியே....

முதலில் கருக்கலைப்பிற்கு காரணங்கள் என்ன?


முறையற்ற கர்ப்பம்

குழந்தை இனம் பரிசோதனை

தடுப்பு முறைகள் குறித்த அறியாமை

தடுப்பு முறைகள் தவறுதல் (30% கருத்தடை முறைகள் தவறுகிறது)

குழந்தை உடல் பரிசோதனை

முதல் இரண்டில் காரணங்களே தவறு. மற்ற காரணங்கள் சரியென்றாலும் அதற்கான கருக்கலைப்பு மனிதாபிமான முறையில் நாம் முடிவெடுக்க முடியாது.

சமீபத்தில் விஜய் டி.வி. நீயா.. நானாவில் உங்களின் ஆசையை அடக்க முடியாதவர்கள் கருவைக்கலைக்க உரிமையில்லாதவர்கள் என்று குற்றம் சாட்டினார் ஒருவர். அவரின் கரு குறித்த உரிமை அவருக்கு உண்டென்றாலும் மனிதாபிமானம் என ஒன்று உள்ளது.சில சமயம்  காரணங்கள் மனிதாபிமானத்தையும் மீறவும் செய்கிறது

ஆனால் இது குறித்தெல்லாம் நான் விவாதிக்க போவதில்லை.

கருக்கலைப்பிற்கு பின் ஏற்படும் விளைவுகள் குறித்து பகிர்கிறேன்
தவறோ, சரியோ அத்தனை பாதிப்புகளும் பெண்களுக்குத்தான் .
உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் வெளியே தெரியும் .எனவே அது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்ளலாம் . ஆனால் மன நல பாதிப்புகள் ......

சில ஆராய்ச்சிகளின் படி கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்கள் எந்த விதமானாலும் 8 வாரங்களுக்குப் பின்னர் 44 சதவிகிதத்தினர் நரம்புத் தளர்ச்சி யினாலும் 36% தூக்கமின்மையாலும் 31% தன் முடிவெடுத்தமைக்கு வருந்துவதாகவும் 11% மன நல மருந்துகளைப் பயன்படுத்துவதாகவும் 25% மன நல ஆலோசகரை நாடுவதாகவும் குறிப்பிடுகிறது. இந்த தகவல்கள் கருக்கலைப்புக்கு பின் எடுத்த சர்வேக்களைச் சார்ந்தது . இது இன்னமும் அதிகமாகத்தான் இருக்க முடியும் . ஏனெனில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்கள் குற்றவாளி எனும் மனோபாவத்தில் சமூகத்திலிருந்து ஒதுங்கும் மனோ நிலைக்கு ஆட்படுவதால் இந்த சர்வேக்களுக்கு ஒத்துழைப்பவர் குறைவே.

இத்தகு அதிர்ச்சியினால் ஏற்படும் அறிகுறிகள்

ஆழமான பய உணர்வு
உதவிக்கு யாருமில்லை எனும் உணர்வு
கூட்டுக்குள் அடைபட்ட பயம்
தன்னிலை மீறுதல்

இவையெல்லாம் அவர்களிடம் குண மாறுதல்களை ஏற்படுத்தி மிகப்பெரிய அளவில் ஆளுமைச்சிதைவை ஏற்படுத்துகிறது.

மேலும்
 இருக்கும் குழந்தையை கொல்லும் உணர்வு
மனப்பதட்டத்தினால் விதண்டாவாதமான பேச்சுகள்
அடாவடித்தனமான மனப்பாங்கு
நிலையில்லாத்தன்மை
கருக்கலைப்பு குறித்த சிந்தனைகள்
மோசமான கனவுகள்
கணவனிடமிருந்து விலகல்
குழந்தைகளை ஒதுக்குதல்
எல்லாவித ஆர்வத்திலிருந்தும் ஒதுங்குதல்
தற்கொலை எண்ணம்
தன்னைத்தானே கொடுமைப்படுத்திக்கொள்ளும் எண்ணம்

ஆகியவையும் ஏற்படலாம்

இந்த அறிகுறிகள் உடனே தோன்றும் என்று கூட சொல்வதற்கில்லை  பல வருடங்கள் கழித்துக்கூட தோன்றலாம்

30-50% பெண்கள் கணவருடன் சேர்வதையோ அல்லது ஆணிணத்தின் மேலோ கூட வெறுப்பு காண்பிக்கிறார்கள்

60% தற்கொலை உணர்வு கொள்கின்றனர்

28% தற்கொலைக்கு முயல்கின்றனர்

சிலருக்கு உணவு மாற்றங்கள் ஏற்படுகிறது. அவை தேவைக்கு அதிகமாக உண்பது அல்லது பசியின்மை

தங்களைக் குறித்த தகுதிக்குறைவு எனும் எண்ணத்தால் சில நேரங்களில் கணவன் மனைவி பிரிவுக்கே கூட காரணமாகிவிடுகிறது.

இத்தனை பாதிப்புகளுக்கு ஆளாகிறாள் பெண் அவளை அறியாமலேயே.
இத்தகு பாதிப்புகள் ஏற்படும் போது ஒன்று பைத்தியம் என ஒதுக்குகிறோம் அல்லது பேய் பிடித்தது என ஓட்டுகிறோம். மன நல மருத்துவரை நாடுவதில்லை

இனியாவது கணவர்களே மாமியார்களே, சமூகமே பெண்ணை கருக்கலைப்பு எனும் கட்டாயத்திற்கு ஆளாக்காதீர்கள். செய்துகொண்டவரையும் ஏளனப்படுத்தாதீர்கள். பாதிக்கப்படுவது வரும் நம் தலைமுறைதான் என சிறிது நேரமாவது யோசித்துப் பாருங்கள்.

என்னுடைய இந்தக் நண்பர் இக்பால் செல்வனின் கருத்து பிடித்ததால் பகிர்கிறேன்.

சமூக காரணங்களுக்காக கருக்கலைப்பை சமுதாயம் ஏற்கின்றன.. கருக்கலைப்பு என்பது நிச்சயம் இயற்கைக்கு விரோதமானவையே... ஏனெனில் இனவிருத்தி தான் இயற்கையின் அடிநாதமே ஆகும் .. ஆனால் சில சந்தர்ப்பங்களில் கருக்கலைப்பு அவசியமாகவே செய்கின்றன..

குறிப்பாக கற்பழிக்கப்பட்ட பெண்கள் - விடயத்தில் கருக்கலைப்பை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் ... !!!

அடுத்து எதிர்பாராத கர்ப்பம் - என்ற நிலையில் கருக்கலைப்பு தேவைப்படுகின்றது .. !!!

சிசு வளர்ச்சி சரியில்லாத நிலையில் - கருக்கலைப்பு செய்யலாம் ..!!!

ஆனால் கருக்கலைப்பில் புத்திசுவாதீனம் இல்லாத பட்சத்தில் அந்த முடிவு பெண்ணுக்கு மட்டுமே இருக்கின்றது ..

ஆண், பெண் குழந்தைகளை எதிர்ப்பார்த்து கருக்கலைப்பு செய்யப்படுதலே ஆசிய நாடுகளில் அதிகம். அதுவும் மனைவிக்கு தெரியாமலும், அல்லது நிர்பந்தப்படுத்தப்பட்டும் செய்யப்படும் கருக்கலைப்பை கிரிமினல் குற்றமாகவே கருத முடியும் .. !!! சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குதலே இதற்கு தீர்வாகும்.. மக்களுக்கு குறிப்பாக ஆண்கள் இந்த விடயத்தில் கழிவிரக்கம் கொள்ளுதலும், சக மனைவியின் உணர்வுகளை உணரவும் வேண்டும் ..

No comments:

Post a Comment