பிளாஸ்டிக்கை ஒழிக்க
வழியின்றி, கடைகளில்
வாங்கும் பொருட்களுக்கு
போடப்படும் பிளாஸ்டிக்
உறைக்கு பணம் வசூலிக்கத்
தொடங்கிய பின்னரும், அதை
உபயோகிப்பது
குறைந்தபாடில்லை.
பிளாஸ்டிக்கை முறையாக
மறுசுழற்சி செய்யாமல்
விடுவதால், நீரிலும்,
நிலத்திலும் அதிகமான
பிளாஸ்டிக் குப்பை சேர்ந்து
நம்மை அச்சுறுத்தி
வருகிறது. இந்நிலையில்,
அமெரிக்காவின்
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்களும்,
சீனாவின் பெய்ஹாங்
பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்களும்
இணைந்து, பிளாஸ்டிக்கை
ஒழிக்கும் வழியைத் தேடி
ஆராய்ச்சி ஒன்றை
மேற்கொண்டுவந்தனர்.
பிளாஸ்டிக்கின் அழிவிலாத்
தன்மை அனைவரையும்
அச்சுறுத்தி வந்த நிலையில்,
கருப்புநிற ஒருவகை
வண்டின் லார்வாவை (புழு)
பிளாஸ்டிக்கை மட்கச்
செய்யும் ஆராய்ச்சிக்கு
பயன்படுத்தினர். இந்த
புழுவின் குடலில் உள்ள ஒரு
வகை பாக்டீரியா ‘பாலியஸ்திரனை ’
உட்கொண்டாலும் அதனை
முழுமையாக செரிக்க
வைக்க வைக்கின்றது என
ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுமார் நூறு
புழுக்களுக்கு 34 முதல் 39
மில்லி கிராம்கள் இந்த ‘ஸ்டைரோபோம் ’(மென்மைப்படுத்திய
பாலியஸ்திரன்) ஒவ்வொரு
நாளும் உணவாக
வழங்கப்பட்டு வந்தது.
எனினும், இந்தப்
புழுக்களுக்கு அது
பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
அவை நல்ல
ஆரோக்கியத்துடன்
இருப்பதாகவும்
தெரியவந்தது என இந்த
ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இவற்றை
நமது நிலங்களிலும்
விவசாயத்துக்கு
பயன்படுத்தலாம் எனவும்
தெரியவந்துள்ளது. இந்த
ஆராய்ச்சியை மேம்படுத்தும்
முயற்சியில் தற்போது
விஞ்ஞானிகள்
ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி
வெற்றியடைந்தால்,
பூமியில் உள்ள பிளாஸ்டிக்
மாசுவால் ஏற்படும்
பிரச்சனைகளை ஒழிக்க
உதவும் என நம்பலாம்!
Maha
Sunday, October 4, 2015
பிளாஸ்டிக் பாக்டீரியா
Saturday, October 3, 2015
வில்லங்க சான்றிதழ்
வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். சம்பந்தபட்ட சொத்து உரிய முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதில் ஏதும் பிரச்சினைகள் உள்ளதா? என்பதைக் கண்டறிய வில்லங்க சான்றிதழ் அவசியம். வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய முறையில் அதை ஆன்லைனில் பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வில்லங்க சான்றிதழ் என்பது என்ன?
ஒருவர் தான் வாங்குகிற சொத்துக்களை உரிய முறையில் பதிவு செய்வது மிக அவசியம். ஆனால் பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாக பல சொத்துப் பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே வில்லங்க சான்றிதழ் எனப்படும் EC (Encumbrance Certificate) மூலம் ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
வில்லங்க சான்றிதழின் அவசியம் என்ன?
வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்குகிற போது அதற்கு சட்ட ரீதியான வழிமுறை என்ன என்பதை அறியாமல் கேள்விப்படும் விபரங்களைக் கொண்டும், தெரிந்தவர்கள் சொல்கிறார்கள் என்றும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். ஒருவேளை அந்த சொத்தானது சரியான முறையில் பதிவு செய்யப்படாத நிலையில் சொத்தினை வாங்குபவர்கள் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகக் கூடும். சில சமயங்களில் சொத்துக்களை இழக்கும்நிலை கூட வரலாம். எனவே வாங்குகிற சொத்தில் வில்லங்கம் ஏதும் இருக்கிறதா? என்று பார்த்து வாங்கினால் எந்த வில்லங்கமும் வராது. அப்படியே வில்லங்கம் இருந்தால் அதை வாங்காமல் வில்லங்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
வில்லங்க சான்றிதழில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?
1.சர்வே எண்
2. விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்து கொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி
3. பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம்
4. சொத்தின் மதிப்பு
5. சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர்
6. தொகுதி மற்றும் பக்க எண்
7. பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண்
இவற்றின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால் வாங்கப்பட்டிருக்கிறது போன்ற முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். வில்லங்க சான்றிதழை வைத்தேத் தாய்பத்திரத்தில் இருந்து யாரிடம் நிலம் வாங்கப்படுகிறதோ அதுவரைக்கும் உள்ள எல்லா பத்திரங்களையும் சரி பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி அந்த சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் பதிவு செய்யப்பட்ட அடமானத்தில் இருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
வில்லங்க சான்றிதழுக்கு எங்கே விண்ணப்பிப்பது?
எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கே வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்நாட்டில் உள்ள எந்த சொத்திற்கும் வில்லங்க சான்றிதழ் பெறலாம்.
விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே இதற்கான விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்பவரின் பெயர், முகவரி, சொத்து விவரம் மற்றும் கிரையப்பத்திர விவரம் ஆகியன கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம்செய்ய வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, சொத்து விவரம் மற்றும் கிரையப்பத்திர விவரம் முதலியவைகள் கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் பெற முடியும்?
பொதுவாக முப்பது ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தான் வில்லங்க சான்றிதழ் கேட்கப்படுகின்றது. அவரவர் தேவையைப் பொறுத்து வருடங்கள் மாறுபடலாம்.
கட்டணம் எவ்வளவு?
பத்து வருடங்களுக்கு எனில் முதல் வருடத்திற்கு 15 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு வருடத்திற்கு ஐந்து ரூபாயும் வசூலிக்கப்படும். இதனுடன் விண்ணப்பத்திற்கு 11 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆன்லைனில் வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தற்போது பத்திரபதிவு அலுவலகங்கள் கணிணிமயமாக்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் 26 ஆண்டுகளுக்கு அதாவது 1987 ஆம் ஆண்டு முதல் சொத்துவிவரங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எனவே 1987க்குப் பிறகான வில்லங்க சான்றிதழை பெறுவது எளிது. அதற்கு மேல் வேண்டுமெனில் தேடி கைப்பட எழுதித்தான் தருவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் போது அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும். கட்டண விவரங்களை http://www.tnreginet.net/igregn/webAppln/indexFee.asp இதில் தெரிந்துகொள்ளலாம்.
பின்வரும் இணைப்பில் சென்று அனைத்து விவரங்களையும் பதிவிட்டு EC பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ஒருரூபாய் மட்டுமே.
தமிழில் விண்ணப்பிக்க http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1 ஆங்கிலத்தில் விண்ணப்பிக்க http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 இந்த இணைப்பில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து நேரடியாகச் சென்றும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது உங்கள் முகவரிக்கும் அனுப்பச் சொல்லலாம். அதற்குரிய தபால் செலவை தபால் கிடைக்கும்போது செலுத்திப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
விண்ணப்பத்தின் நிலையறிய http://www.tnreginet.net/webec_status_public.asp இந்த இணைப்பில் செல்லவும்.
ஒவ்வொரு மாவட்டத்தின் தொடர்பு முகவரியையும், தொலைபேசி எண்ணையும் http://www.tnreginet.net/english/dro_list.asp இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வீட்டுக்கு முகவரிக்கு நேரடியாக மேலும் விவரங்களை http://www.tnreginet.net/ இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வில்லங்க சான்றிதழில் தெரிந்து கொள்ளமுடியாத சில தகவல்கள்:
சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் போட்டிருந்தாலோ, அடமானம் வைத்திருந்தாலோ இது குறித்த தகவல்கள் வில்லங்க சான்றிதழில் வராது.
1.11.2009க்குப் பின்னர் சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு Power of attorney யாக யாரையாவது நியமித்திருந்தால் அதைத் தெரிந்துகொள்ள முடியும். ஏனெனில் அதற்கு முன் அதனை பதிவு செய்யும் முறையை அரசு அமல்படுத்தவில்லை. எனவே 1.11.2009க்கு முன் உள்ள Power of attorney குறித்த தகவல்கள் வில்லங்க சான்றிதழில் வராது .
வலைப் பதிவர் விழா
நாட்டாமை உங்க தீர்ப்பை சொல்லுங்க!.......2015
மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.இணையத்தில் தமிழ் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற போட்டிகளையும் அறிவித்து,கரும்பு தின்னக்கூலி கொடுப்பதைப்போல! அதற்கு வெகுமதியாக பணமுடிப்பும் கொடுக்குறாங்க!.தீர்ப்புச்ச தகுதி உங்களுக்கு இணையதளத்தில் தமிழ் வாசிக்கத்தெரிந்தால் மட்டுமே போதுமுங்க,அதனால் வாங்க! வாங்க! நீங்க வாங்க!! மேலும் விவரங்கள் அறிய உடனே போங்க http://bloggersmeet2015.blogspot.com/
வலைத் தளத்திற்குத்தாங்க.......நான்க மூன்று கட்டுரைகளை எழுதி அனுப்பி இருக்கிறேங்க................
உங்களுக்கு வலைப்பக்கம் இருக்க வேண்டிய அவசியமில்லை இணையத்தில் வாசிக்க மட்டும் தெரிந்தாலே போதும்..நீங்களும் நாட்டாமைதாங்க!.
செய்ய வேண்டியது என்ன?
http://bloggersmeet2015.blogspot.com/
எனும் இணைய தளத்திலிருக்கும் “போட்டிக்கு வந்த படைப்புகளை“ படித்துவிட்டு, “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள்” என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15பேரைத் தேர்வுசெய்யவேண்டும். முதல்பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bloggersmeet2015@gmail.co
உங்கள் கருத்து, ஏற்கெனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் உங்களுக்குப் பரிசு உண்டு!
விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்! (எல்லாப் படைப்புகளையும் பற்றி முழுமையாக விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப்பின் விதிமுறை அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம் பின்னால் உதவும்.)
நமது தேர்தல்களின் போது, பத்திரிகைகள் நடத்தும் கருத்துக் கணிப்புப் போலவே வைத்துக்கொள்ளலாம். சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை எடுத்து கருத்துச் சொன்னவர்க்கே முதல்பரிசு ரூ.5,000, அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர் முறையே இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000 விழாவில் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும்.
போட்டிக்கான விதிமுறைகள் –
யார் வேண்டுமானாலும் இந்த “விமரிசனக் கருத்துப் போட்டி“யில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address) இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம் கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்திலர் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப் படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும்
ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். ( ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை , (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை இதே வரிசையில் தெரிவித்து பதினைந்து பரிசுக்கும் ( 5x3=15) தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது. இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை.
ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது.
வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59வரை அனுப்பலாம்.
(5) மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம்.
இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.
விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.
வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல் முகவரி இரண்டும் இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை .
மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.
) போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.
------------------------------------------
நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
இதனைப் பார்க்கும் நமது வலைப்பதிவர்கள், குறிப்பாகப் போட்டியாளர்கள் அனைவரும் மற்றும் நண்பர்களும்
தத்தம் வலைப்பக்கங்களில் இதனைப் பகிர்ந்தும் தொடர்புள்ள செய்தித்தாள் ஊடகங்களில் வெளியிடச் செய்தும் பலரும் இப்போட்டியில் பங்கேற்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்
--விழாக்குழு--
அவசர தொடர்பு...
இந்தியா முழுவதற்குமான அவசர அழைப்பு எண்ணாக டிராய் பரிந்துரை செய்த 112 எண்ணை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த எண் விரைவில் நாடு முழுவதும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் எந்த ஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911, இங்கிலாந்தில் 999 போன்ற எண்களை அவசர உதவிக்காக செயல்படுத்தி வருகின்றன. ஆனால் இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது.
இதைமாற்றி நாடு முழுவதும் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் எண் 112ஐ அறிமுகம் செய்யலாம் என தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. மேலும் செல்போனில் அழைப்பு வசதி நிறுத்தப்பட்டிருந்தாலும், வேறு வகையில் தடை செய்யப்பட்டிருந்தாலும், எந்த சூழலிலும் இந்த 112ஐ எண்ணை மட்டும் அழைக்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே டிராயின் பரிந்துரையை ஏற்று நாடு முழுவதும் விரைவில் அவசர கால உதவி அழைப்புக்கு எண் 112ஐ அழுத்தவும் என்ற அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது
Friday, October 2, 2015
வெளிநாட்டு உதவித்தொகை
வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சில, மிகவும் முக்கியமானவை.
அதைப்பற்றி அறிந்துகொள்வது, வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். பிரிட்டன் BRITISH CHEVENING SCHOLARSHIPS இது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு உதவித்தொகையாகும். இந்த உதவித்தொகையைப் பெற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சாராத, இதர 116 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விபரங்களுக்கு www.chevening.org COMMONWEALTH SCHOLARSHIPS இந்த உதவித்தொகை, காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து, பிரிட்டனில், உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகும். டியூஷன் கட்டணம், வாழ்க்கைச் செலவினங்கள், விமானப் போக்குவரத்து கட்டணம் மற்றும் கல்வி ஆதாரங்களுக்கான கட்டணம் உள்ளிட்ட முக்கிய கட்டணங்கள், இந்த உதவித்தொகைக்குள் அடங்கும். இதைப்பற்றிய விபரங்களுக்கு www.cscuk.dfid.gov.uk அமெரிக்கா USA FULBRIGHT SCHOLARSHIPS சர்வதேச மாணவர்களுக்காக, அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகை இது. படிப்பு காலத்தில், ஒரு மாணவருக்கு ஆகும் அனைத்து செலவினங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த உதவித்தொகை. இதுபற்றிய முழு விபரங்களுக்கு www.iie.org/en/Fulbright ROTARY FOUNDATIONS AMBASSADORIAL SCHOLARSHIPS தனியார் பங்களிப்பின் மூலமாக, இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்கல்வி மேற்கொள்ளும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய உதவித்தொகை திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். விரிவான விபரங்களுக்கு www.rotary.org/en/studentsandyouth/educationalprograms/ambassadorialscholarships/Pages/ridefault.aspx ஆஸ்திரேலியா AUSTRALIA AWARDS SCHOLARSHIPS திறமையும், தகுதியும் வாய்ந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு AusAID -ஆல் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. விரிவான விபரங்களுக்கு www.australiaawards.gov.au இதர உதவித்தொகை திட்டங்கள் IELTS SCHOLARSHIPS ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட நாடுகளில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை ரூ.3 லட்சம் மதிப்பிலானது மற்றும் டியூஷன் கட்டணத்தை ஈடுசெய்வதற்கானது இது. மேலதிக விபரங்களுக்கு www.britishcouncil.in/exam/ielts/scholarships TOEFL SCHOLARSHIPS நல்ல அகடமிக் செயல்பாடும், சிறந்த ஆங்கில புலமையும் உடையவர்களுக்காக, ETS -ஆல் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிற்காக 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய 20 உதவித்தொகைகளும், 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒரு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. விரிவான விபரங்களை அறிய www.ets.org/toefl/scholarships.
Thursday, October 1, 2015
ஓடிப் போகும் பெண்கள்
வீட்டைவிட்டு ஓடிப்போவது எந்த பிரச்சினைக்காவது தீர்வாகுமா? அதுவும் பெண்கள்?. பெண் சுதந்திரம் என்பதை வெகு தவறாகப் புரிந்துகொண்ட பல பெண்கள் இப்படி வீட்டை விட்டு ஓடிப்போய் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். வீடு, உறவுகள் எவ்வளவு பாதுகாப்பானது என்பது அந்த பாதுகாப்புக்குள் இருக்கும் வரை தெரியப் போவதில்லை.
ஏதோ ஒரு எழுச்சியில் யாரையோ பழிவாங்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கை பிறகு அவர்களுக்கே உபத்திரவமாக வந்துவிடுகிறது. கல்லூரி, அலுவலகம் என்று சுதந்திரமாக செல்லும் பெண்கள், அந்த எல்லையை விட்டு மீறும்போது ஏற்படும் இன்னல்களைப் பற்றி சிந்திக்க மறுக்கிறார்கள். சுதந்திரம் என்பது மகிழ்ச்சியானது தான். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை மீறும்போது எப்படிப்பட்ட ஆபத்து வேண்டுமானாலும் வரலாம். வீட்டைவிட்டு ஓடிப்போவது ஒரு சமூக சீர்கேடு மட்டுமல்ல.
அவர்களுக்கே ஆபத்து என்பதை உணரவேண்டும். வீட்டை விட்டு ஓடிப்போவது ஒருவருடைய இயலாமையைக் காட்டுகிறது. பலவீனத்தைக் காட்டுகிறது. இன்றைய பெண்கள் அறிவாளிகள் என்று சொல்லும் நாம் இதையெல்லாம் எந்த அறிவில் சேர்த்துக் கொள்வது? ஒரு பிரச்சினைக்குத் தீர்வு ஓடிப்போவதில் இல்லை. ஓடிப்போகும் பெண்கள் ஒருவித சைக்கோ என்று சொல்லப்படும் மனநிலையை ஒத்தவர்கள். மற்றவர்களை துன்புறுத்தி, அலையவைத்து மகிழ்ச்சியடைய நினைப்பவர்கள்.
இதனால் அவர்கள் எந்தவிதமான ஆபத்துகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அவர்களுக்கே தெரியாது. பிரச்சினைகளை நேருக்கு நேர் நின்று எதிர்த்துப் போராடி ஜெயிப்பவர்கள் தான் தைரியமான பெண்கள். பெண்களின் அறிவு, பிரச்சினை காலத்தில் கைகொடுக்க வேண்டுமே தவிர வீட்டைவிட்டு ஓடிப்போக வழிதேடக்கூடாது. பிரச்சினை எதுவானாலும் அதை வீட்டிலிருந்தே சரிசெய்ய வேண்டும். வீட்டிலிருக்கும் பிரச்சினைகளையே தீர்க்க முடியாவிட்டால் இந்த பெரிய சமுதாயத்திலுள்ள பிரச்சினைகளை எப்படி தீர்க்க முடியும்? சமீபத்தில் காசியாபாத் நகரில் நேகா என்ற பெண் கொலை செய்யப்பட்டாள்.
அது எப்படி தெரியுமா? நேகா ஒருவரை காதலித்து வீட்டைவிட்டு ஓடிவந்து திருமணம் செய்துகொண்டாள். இரண்டு குழந்தைகள் பிறந்தது. வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டது. தீர்த்துவைக்க உறவுகள் இல்லை. அவள் கணவன், குழந்தைகளை விட்டு வெளியேறினாள். வெளியில் வந்த அவளுக்கு மேரட் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். சில நாட்களுக்கு பிறகு பிலால் என்பவரோடு தொடர்பு ஏற்பட்டது. அதை மேரட் கண்டித்தபோது, தான் ஒரு சுதந்திரப் பெண் என்று கூறினாள்.
சுதந்திரம் என்றால் இன்னதென்று தெரியாத தன்மையை சுதந்திரம் என்று நினைப்பது எவ்வளவு பெரிய அறியாமை. இதனால் ஆத்திரமடைந்த மேரட் அவளை கொலை செய்துவிட்டான். வீட்டைவிட்டு வெளியேறிய முதல் கோணல், அவள் வாழ்க்கையையே முற்றிலும் கோணல் ஆக்கிவிட்டது. ஓடிப்போகும் பெண்கள் வாழ்க்கையைவிட்டே ஓடிப்போய் விடுகிறார்கள். அதனால் தெளிவாக சிந்தித்து நிதானமாக முடிவெடுத்து, பெற்றோர் விருப்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்
Wednesday, September 30, 2015
ஆகாய தாமரை
ஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் வழி
தமிழ்நாட்டில் ஏரிகளிலும் குட்டைகளிலும் அதிகமாக பரவி இருக்கும் தாவரம் ஆகாய தாமரை
இந்த தாவரம் நம் நாட்டு தாவரமே அல்ல. இதற்கு இயற்கை எதிரிகள் இல்லாததால் அதிகமாக பரவி வருகிறது
இந்த தாவரம் வந்தால் ஒரு ஏரியை காப்பாற்றுவது மிக கடினம்.
இந்த தாவரத்தை பற்றியும் இதனால் ஏற்படும் தீங்குகளை பற்றியும் ஏற்கனவே படித்து உள்ளோம்
இது வரை ஆகாய தாமரையை கட்டுபடுத்த வேதியியல் முறை தான் பயன் படுத்த பட்டது .2, 4-D, glyphosate மற்றும் paraquat போன்ற களை கொல்லிகள் பயன் படுத்த பட்டன
ஆனால் நீரில் இவை கலப்பதால் நீர் மாசு படுகிறது.மீன்கள் சாகின்றன.
எப்படி இந்த ராட்சசனை ஒழிப்பது என்று திண்டாடிய நிலையில் ஒரு நல்ல நியூஸ்.
அதுவும் நம் ஊரில் எளிதாக கிடைக்கும் ஒரு தாவரத்தை வைத்து ஆகாய தாமரையை முழுவதும் ஒழிக்க அண்ணாமலை பல்கலை கழக நிபுணர்கள் கண்டு பிடித்து உள்ளனர்
கற்பூரவள்ளி அல்லது ஓமவல்லி என்று எளிதாக வளரும் தாவரத்தை பார்த்து இருப்பீர்கள்
இதன் இலையை காய வைத்து ஒரு லிட்டருக்கு 20 கிராம் நீரில் கலந்து ஆகாய தாமரையின் மீது தெளித்தால் அவை மடிந்து விடுகின்றன
மேலும் தகவல் அறிய
Dr கதிரேசன், அண்ணாமலை பல்கலை கழகம்
email: rm.kathiresan@sify.com, மொபைல்: 09655188233