ஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் வழி
தமிழ்நாட்டில் ஏரிகளிலும் குட்டைகளிலும் அதிகமாக பரவி இருக்கும் தாவரம் ஆகாய தாமரை
இந்த தாவரம் நம் நாட்டு தாவரமே அல்ல. இதற்கு இயற்கை எதிரிகள் இல்லாததால் அதிகமாக பரவி வருகிறது
இந்த தாவரம் வந்தால் ஒரு ஏரியை காப்பாற்றுவது மிக கடினம்.
இந்த தாவரத்தை பற்றியும் இதனால் ஏற்படும் தீங்குகளை பற்றியும் ஏற்கனவே படித்து உள்ளோம்
இது வரை ஆகாய தாமரையை கட்டுபடுத்த வேதியியல் முறை தான் பயன் படுத்த பட்டது .2, 4-D, glyphosate மற்றும் paraquat போன்ற களை கொல்லிகள் பயன் படுத்த பட்டன
ஆனால் நீரில் இவை கலப்பதால் நீர் மாசு படுகிறது.மீன்கள் சாகின்றன.
எப்படி இந்த ராட்சசனை ஒழிப்பது என்று திண்டாடிய நிலையில் ஒரு நல்ல நியூஸ்.
அதுவும் நம் ஊரில் எளிதாக கிடைக்கும் ஒரு தாவரத்தை வைத்து ஆகாய தாமரையை முழுவதும் ஒழிக்க அண்ணாமலை பல்கலை கழக நிபுணர்கள் கண்டு பிடித்து உள்ளனர்
கற்பூரவள்ளி அல்லது ஓமவல்லி என்று எளிதாக வளரும் தாவரத்தை பார்த்து இருப்பீர்கள்
இதன் இலையை காய வைத்து ஒரு லிட்டருக்கு 20 கிராம் நீரில் கலந்து ஆகாய தாமரையின் மீது தெளித்தால் அவை மடிந்து விடுகின்றன
மேலும் தகவல் அறிய
Dr கதிரேசன், அண்ணாமலை பல்கலை கழகம்
email: rm.kathiresan@sify.com, மொபைல்: 09655188233
Wednesday, September 30, 2015
ஆகாய தாமரை
Tuesday, September 29, 2015
இயற்கை களை கொள்ளி
கோரை, அருகு போன்ற களைகளை அழிக்கும் இயற்க்கை களைகொல்லி
கோரை, அருகு போன்ற களைகளை அழிக்கும் இயற்க்கை களைகொல்லி-
மாட்டு கோமியம்+கடுக்காகொட்டை+எலுமிச்சம்பழம் இவை மூன்றையும் கலந்து தயார் செய்யவேண்டும்.
செய்முறை- 13௦ லிட்டர் கோமியத்தை சேகரித்து பிளாஸ்டிக் தொட்டியில் உற்றி மழை, வெய்யல்படாமல் ஒரு மாதம் வைத்திருக்கவும். தொட்டியின் மேல் பகுதியை சணல் சாக்கு கொண்டு மூடி வைக்கவும். 3 கிலோ கடுக்காய் கொட்டை( பொடியாக வாங்க கூடாது) வாங்கி( கிலோ 80 ரூபாய்க்கு கிடைக்கிறது) அதை இடித்து வைத்து கொள்ளுங்கள். 1௦ லிட்டர் கோமியம் (சேகரித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது) எடுத்து அதை பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி அத்துடன் இடித்து வைத்த கடுக்காய் கோட்டையை கொட்டி நன்றாக கலக்கவும். அத்துடன் 1௦ எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கவும். எலுமிச்சை பழதோலையும் அந்த கலவையில் போட்டு கலக்கவும். இவற்றை 15 நாட்கள் ஊற விடுங்கள். தினமும் இரண்டு முறை கலக்கி விட வேண்டும்.
தெளிப்புமுறை- 15 நாட்கள் ஊற வைத்த கடுக்காய், எலுமிச்சை கலந்த கலவையை துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். ஒரு மாதம் ஆனா பழைய கோமியம் 7௦ லிட்டர் எடுத்து அதில் கலவையை சேர்த்து கலக்கவும்.(களைகள் முற்றி இருந்தால் 5௦ லிட்டர் சிறுநீர்) கைத்தெளிப்பானை எடுத்து கொண்டு அதில் இந்த கலவையை ஊற்றி களைகளின் அனைத்து பகுதியிலும் படும்படி நன்றாக தெளிக்க வேண்டும். தெளித்த ஒரு வாரத்தில் களைகள் கருக ஆரம்பிக்கும்.
குறிப்பு- கடுக்காய் கொட்டையை உடைக்கும் பொழுது மூக்கை துணியில் கட்டி கொள்ளுங்கள். அதன் துகள்கள் சுவாசகுழாயின் வழியே நமது உடலுக்குள் சென்றால் காய்ச்சல் வரும்.
தெளிப்பிர்க்கு கைத்தெளிப்பானை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெளிக்கும் பொழுது பயிரின் மேல் படாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
தெளிப்பிர்க்கு முதல் நாள் தண்ணீர் பாய்ச்சவேண்டும். தெளித்த பின்பு 5 நாட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கூடாது.
காலை 7 மணி முதல் 1௦ மணி வரைதான் தெளிக்க வேண்டும்.
Power of atterny
பெரும்பாலானவர்கள் வேலைக்காக வெளிநாட்டில் வசிக்கின்றனர். இவர்களில் தன்னுடைய பெயரில் வீட்டு மனை அல்லது வீடு வாங்க முயற்சிக்கும் போது வெளிநாட்டில் இருந்து கொண்டே நம்முடைய பெயரில் சொத்துக்களை இந்தியாவில் வாங்க முடியும்.
அதற்கான வழிமுறைதான் இந்த ஜெனரல் பவர் ஆஃப் அட்டார்னி
Power of (General Attorney (GPA or GPOA) or Purchase Power.
தேவையான ஆவணங்கள்
பவர் எழுதி கொடுப்பவரின் (Principle)
புகைப்பட அடையாளச் சான்று
இருப்பிடச் சான்று
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்
ரூபாய் 20-க்கான முத்திரைத் தாள் (பத்திரம்)
பவர் ஏஜண்ட் (எழுதி வாங்குபவர்)-ன்
புகைப்பட அடையாள அட்டை ( Photo identity proof)
இருப்பிடச் சான்று (Residence Proof)
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும்
இரு அத்தாட்சிகளின் (Two witness)
புகைப்பட அடையாளச் சான்று (Photo ID proof)
இருப்பிடச் சான்று (Residential proof)
இந்த ஆவணங்களை தங்களது சொந்த ஊரில் (தமிழ்நாட்டில்) இருக்கும் போதே SUB_REGISTRAR OFFICE (சார் பதிவாளர் அலுவலகம்) தாக்கல் செய்யலாம்.
செலவு தொகை:
ரூபாய் 1100க்கான வரவு காசோலை (DEMAND DRAFT) உள்ளுரில் மாற்றத்தக்க (LOCAL CLEARANCE) வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்கின்றோமோ, அந்த சார்பதிவாளர் அலுவலக பெயரிலே டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு: Sub Registrar, Tiruchirappalli Joint-III, Trichy
ரூபாய் 1100 கட்டணம் தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பவர் கொடுப்பதற்கு மட்டுமே.
ரூபாய் 10100 கட்டணம் குடும்ப நபர்கள் இல்லாது நண்பர்கள் அல்லது மாற்று நபர்களுக்கு(Third Party) பவர் கொடுபதற்கு பொருந்தும்.
தாக்கல் செய்யும் முறை:
மேற்கண்ட ஆவணங்கள் தாக்கல் செய்வதற்காக, பத்திரம் எழுதுபவர்களிடம் சென்று ஷரத்துக்களை முதலில் பத்திரத்தில் டைப் செய்து கொள்ள வேண்டும். (ஆங்கிலம் அல்லது தமிழில் ) அல்லது எளிதாக நாமே கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி தெளிவாக எழுத வேண்டும்.
அல்லது சிவில் வக்கீல்களை கொண்டு பத்திரத்தில் ஷரத்துகளை டைப் செய்து கொள்ளலாம்.
இந்த பவர் ஆஃப் அட்டார்னி எதற்கெல்லாம் உதவும்.
சொத்துகளை தனது பெயருக்கு வேறொருவரின் மூலமாக வாங்கலாம்.
வெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது பத்திரம் பதிவு செய்யும் இடத்திற்கு வராமலேயே, இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்தும் கொள்ளலாம்.
சொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆவணக்கள் காலவாதி ஆகாது.
முக்கியமான ஒன்று யாதெனில், எழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை, இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது ஆகும்..
வரன்முறைகள்:
இந்த ஆவணத்தின் மூலம் சொத்துக்கள் வாங்க மட்டுமே முடியுமே, தவிர சொத்துக்களை விற்க முடியாது
சொத்துக்களை விற்பனை செய்ய நினைத்தால் சொத்து விவரங்கள் கண்டிப்பாக பத்திரத்தில் பதிய வேண்டும்.
ஆனால் சொத்துக்கள் வாங்கும் போது சொத்து விவரங்களை பதிவு செய்ய அவசியமில்லை.
அவ்வாறு சொத்து விவரங்களை வாங்கும் போது பதிய நினைத்தால் அது ஸ்பெஷல் பவர் ஆஃப் அட்டார்னி ஆகிவிடும். அது ஒரே ஒரு சொத்து அல்லது சொத்துக்கல்(பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்துக்களை மட்டும்) வாங்க மட்டுமே வாங்க செல்லுபடி ஆகும்.
இதன் பயன்கள்:
வெளிநாட்டில் இருக்கும் போதே தாயகம் செல்லாமல் முறையாக சொத்துக்களை நம்முடைய பெயரிலே வாங்கிக் கொள்ளலாம். இதனால் அவசர பயணம் தவிர்க்கப்படும்.
இதை தவிர ஷரத்தில் எழுத்தப்பட்ட அத்தனை விவரங்களும் முறையாக செயல்படுத்தலாம்.
ஆங்கிலம் மற்றும் தமிழில் ஷரத்த்துகளை பத்திரத்தில் பயன்படுத்தலாம்.
வங்கிகள் மற்றும் வெளிநாடுகளில் இந்த ஆவணங்கள் உதவ ஆங்கிலத்தை ஷரத்தை ஆங்கிலத்தில் தயார் செய்து கொள்வது நல்லது.
வெளிநாட்டில் இந்த ஆவணங்கள் தாக்கல் செய்ய இந்தியன் கான்சலேட் அல்லது எம்பாசியை அணுகலாம்.
எழுதும் முறை:
முதலில், ஷரத்துக்களை தாயகத்தில் ஆங்கிலத்தில் வக்கில் அல்லது பத்திரம் எழுதுபவர்கள் மூலம் டைப் செய்து இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
அதனை சாதாரண ஏ4 ஷீட்(தாளில்)ல் ப்ரிண்ட் செய்து கொள்ள வேண்டும்.
ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் தங்கள் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டு பவர் ஆஃப் அட்டார்னிக்கான தொகையை (துபாய் நாட்டில் 115 திர்ஹம்கள்) செலுத்தித் தூதரக அதிகாரிகள் முன்பு ஆவணங்களில் கையோப்பம் இடல் வேண்டும்.
தூதரக அதிகாரி முத்திரை மற்றும் அவரது கையொப்பம் பெற்றதும்
அதனை அப்படியே இந்தியாவுக்கு தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்ப வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து இந்த ஆவணம் வந்ததற்காக. அந்த தபால் கவரை அல்லது கூரியர் கவருடன்….
பவர் ஆஃப் அட்டார்னி எழுதி வாங்கிய நபர் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் தாக்கல் செய்ய அதற்கான கட்டணங்களுடன் (ரூபாய் 1100 அல்லது ரூபாய் 10100 கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து கொடுத்தால்.
இதனை 90 நாட்களுக்குள் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிய வேண்டும். (சட்டம் என்ன சொல்கிறது என்றால் இப்படி எழுதப்பட்ட ஆவணம் இந்தியாவிற்கு வந்த 90 தினங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். எனவே அங்கிருந்து வந்த தபால் கவர் மிகவும் முக்கியம்!)
அதனை சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் அட்ஜுடிகேஷன்(adjudication) அல்லது பதிவு செய்து கொள்வார்கள்.
ஒரிஜினல் பத்திரத்தை 7 நாள் அல்லது 10 நாளில் சப்ரிஜிஸ்டர் ஆபிஸில் பெற்றுக்கொள்ளலாம்.
மாதிரிப் படிவம்
*******************************
DRAFT CONVENTIONAL FORMAT /GENERAL POWER OF ATTORNEY
******************************************************************************************
THIS DEED OF GENERAL POWER OF ATTORNEY HAS BEEN EXECUTED ON THE DAY OF 21ST OF APRIL MONTH 2013, AND EXECUTED PLACE: ….…
BE IT KNOWN TO ALL MEN BY THESE PRESENTS THAT, I XXXXXXXXX (PASSPORT NO. FXCXCSXX) S/O. XXXXXXXXX, AGED XX YEARS, NON-RESIDENT INDIAN (NRI), PRESENTLY RESIDING IN XXXXXXX, XXXXXX AND PERMANENT ADDRESS OF ORIGIN AT NO. 23, XXXXXXX, TRICHY DISTRICT – 620124, TAMIL NADU, DO HEREBY NOMINATE CONSTITUTE AND APPOINT MY FATHER MR. XXXXXX (FAMILY CARD NO. 17/G/XXXXX) S/O.XXXXXXX , AGED XXYEARS, PRESENTLY RESIDING AT NO. 23, XXXXX, XXXXXXX, TRICHY DISTRICT – 6200124, TAMIL NADU, WHOSE HAND AND SIGNATURE ARE IDENTIFIED AT THE FOOT OF THESE PRESENTS, TO BE MY TRUE AND LAWFUL ATTORNEY FOR ME AND IN MY NAME AND ON MY HALF TO DO AND EXECUTE ALL AND ANY OF THE FOLLOWING ACTS, DEEDS AND THINGS AND TO EXERCISE ALL AND ANY OF THE POWERS AND AUTHORITIES HEREBY CONFERRED AND CONFIRMED, NAMELY:-
1. TO PURCHASE IMMOVABLE PROPERTIES ON MY BEHALF IN MY NAME IN INDIA OUT OF THE FUNDS SOLELY BELONGING TO ME.
2. THAT YOU HAVE TO ACT AS MY ATTORNEY, TO NEGOTIATE AND PAY THE ADVANCE AMOUNT TO THE VENDOR FROM OUT OF THE FUNDS PROVIDED FOR AND TO ENTER SALE AGREEMENT WITH THE VENDOR.
3. TO GET LEGAL OPINION REGARDING THE LEGAL ASPECTS OF THE PROPERTY CONCERNED FROM THE ADVOCATES.
4. TO APPLY ENCUMBRANCE CERTIFICATE REGARDING THE ENCUMBRANCE OF THE PROPERTY CONCERNED ON MY BEHALF IN MY NAME IN INDIA AT CONCERNED JURIDICTIONAL SUB-REGISTRAR OFFICE(S) OF THE DISTRICT(S) WHERE THE PROPERTY BELONGS TO.
5. AND TO APPLY LEGAL ESTIMATION OF THE PROPERTY WITH CONCERNED ESTIMATOR / ENGINEER TO PAY THE NECESSARY FEES AND SIGN ON MY BEHALF IN ANY AND EVERY DOCUMENT / FORM(S)
6. TO SIGN AS VENDOR POWER OF ATTORNEY IN THE APPROPRIATE FORMS AND ALSO SIGN IN THE SALE DEED ALONG WITH THE VENDOR IN THE PRESENCE OF THE CONCERNED SUB-REGISTRAR, WHERE THE SALE DEED HAS TO BE REGISTERED AND TO PAY THE ENTIRE BALANCE OF SALE CONSIDERATIONS TO THE VENDOR AND ALSO PAY NECESSARY REGISTRATION FEES IN THE SUB-REGISTRAR’S OFFICE.
7. AND ALSO TO DO EVERY ACT INCLUDING PREPARING THE PLAN, TO SIGN IT, TO PRESENT IT TO THE ALL AND TOGETHER CONCERNED AUTHORITIES TO PAY THE NECESSARY FEES AND SIGN ON MY BEHALF IN ANY AND EVERY DOCUMENT.
8. TO RECEIVE FROM THE PURCHASER(S) SALE CONSIDERATION AND TO GIVE PROPER RECEIPTS AND DISCHARGES FOR THE SAME.
9. TO APPLY TO THE COMPETENT AUTHORITIES FOR MUTATION OF MY PROPERTIES IN FAVOUR OF AND IN THE NAME OF THE PURCHASER.
10. TO FILE PETITIONS AND SUITS AND APPLICATION AND TO EXECUTE THE DEEDS BEFORE COURTS OF ALL NATURE AND BEFORE ALL CONCERNED AUTHORITIES TO DEFEND AND TO COLLECT THE INTERESTS OF ALL NATURE TO REPRESENT BEFORE ALL SUCH COURTS AND AUTHORITIES AND TO DEFEND AND TO EXPEND ANY SUCH MONEY REQUIRED THEREFORE AND TO PASS RECEIPT THEREFORE.
11. TO COMMENCE AND PERSECUTE AND DEFEND ALL LEGAL PROCEEDINGS, TO APPOINT SOLICITOR AND ADVOCATES, TO DECLARE AND SIGN ALL PLAIN, WRITTEN STATEMENTS, AFFIDAVITS ETC., TO PROTECT AND TO DEFEND OR TO OPPOSE AS MY BE NECESSARY IN RESPECT OF THE PROPERTIES AS MY ATTORNEY.
12. TO RECEIVE, ACKNOWLEDGE AND TO REPLY ALL NOTICES SUMMONS, LETTERS, ETC., IN CONNECTION WITH THE PROPERTY AND TO TAKE SUCH OTHER SUITABLE ACTION AS MAY BE FOUND EXPEDIENT AND NECESSARY BY ATTORNEY.
13. AND TO INVEST ANY OF MY MONEYS IN SUCH MANNER, AT SUCH RATE OF INTEREST AND UPON SUCH SECURITY AS MY SAID ATTORNEY SHALL IN HIS ABSOLIUATE DISCRETION THINK FIT, AND FROM TIME TO TIME TO ALTER AND VARY THE SAID INVESTMENTS, AS AFORESAID, TO DEPOSIT THE SAID MONEYS OR ANY PART THEREOF WITH ANY POST OFFICE, BANK OR BANKS TO WHOM MY SAID ATTORNEY SHALL THINK FIT TO ENTRUST
14. TO REPRESENT ME BEFORE ALL CENTRAL AND STATE GOVERNMENT, MUNICIPAL CORPORATION AND ELECTRICITY BOARD, TELEPHONE DEPARTMENT, AND ANY OF ITS AUTHORITIES FOR ANY PURPOSE WHATS OVER IN REGARD TO MY INTEREST OF THE MY PROPERTIES.
15. AND GENERALLY CONCERNING THE MATTERS, PROPERTIES AND PURPOSE MENTIONED HEREIN AND TO EXERCISE ALL THE RIGHTS AND POWERS TO WHICH I KNOW OR SHALL HEREAFTER AT ANY TIME BE ENTILES, TO EXECUTE AND PERFORM ANY AND EVERY ACT, DEED, MATTER OR THING WHICH IN CONNECTION THEREWITH THOUGHT TO BE DONE, EXECUTED AND PERFORMED IN THE OPINION OF ANY ATTORNEY AS FULLY, AND EFFECTIVELY TO ALL INTENTS AND PURPOSES AS I MIGHT AND COULD DO, EVEN I AM PERSONALLY PRESENT.
16. I DO HEREBY AGREE TO RATIFY AND CONFIRM ALL THAT MY ATTORNEY LAWFULLY DOES BY VIRTUE OF OR AND UNDER THIS POWER. THE POWER AGENT SHALL MAINTAIN TRUE AND PROPER DOCUMENTS AND SHALL SUBMIT THE SAME AS AND WHEN CALLED UPON TO DO SO.
AND I, THE SAID XXXXXXXXXXX HEREBY AGREE TO CONFIRM AND RATIFY ALL AND WHATSOEVER MY SAID ATTORNEY OR ANY SUBSTITUTE OR AGENT, APPOINTED BY HIM, UNDER THE POWER IN THAT BEHALF HEREIN BEFORE CONTAINED SHALL LAWFULLY DO OR CAUSE TO BE DONE.
IN WITNESS WHEREOF, I THE SAID xxxxxxxxx HAVE HERE UNTO SET MY HAND AND SIGNATURE ON THIS 21ST APRIL 2013.
WITNESSESS:
1.
2.
DRAFTED BY ADVOCATE / NOTARY PUBLIC: MR. …………………… REGN NO.
…………………….……….DISTRICT,
Friday, September 25, 2015
வட்டம்
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது
வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D – விட்டம். R – ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.
சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)
நான் கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே…
நான்: இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.
ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?
நான்: சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.
ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.
நான்: ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.
ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.
இருப்பினும் நான் கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. எனக்கும் விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து உள்சென்றேன்.
இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.
எனது தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். எங்கள் ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சகரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணிஎன்னிடம் வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற நான் எழுத வேண்டும்.
அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் என்னை நெருடியது. அவ்வாக்கியம்,
ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.
இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக நினைவுக்கு வர, என் தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினேன்.
பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.
அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.
இந்த விளக்கம் என் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார். நானும் சிலவற்றை தெரிந்துகொள்ள அவரிடம் சில விளக்கங்கள் கேட்டேன். அதற்கு என் தாத்தா கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் பாதித்தது.
அவ்வார்தைகள்…..
உனக்கெதற்கு சாமி இந்த பொழப்பு நல்லா படிச்சு பெரிய உத்யோகத்துக்கு போ….
ஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைந்தேன்..
ஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும்??? தற்காலத்தில் அவை என்ன ஆனது???
எதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்????
உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம் உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு ஓடுவதன் காரணம் என்ன???
Google+ ல் சுப்ரமணியன்
Tuesday, September 22, 2015
உதவிகள்
தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள்
1 . தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கைநடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே " RED Society " .. .யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள் .
2 . குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது
http : / / www. bharatbloodbank . com / பார்க்கவும் .
3 . விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம் . தயவு செய்து தயங்காமல்
1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும் ). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே . பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள் .
4 .மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற
* 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் .
5 .வாகனம் ஓட்டும் உரிமை அட்டை , குடும்ப அட்டை, பாஸ்போர்ட் , வங்கிக் கணக்குப் புத்தகம் .. .
போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள் . அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும் . அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.
6 . அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள் . நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே ! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் ** நீரினையும் , இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம் .
7 . இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது . இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே
8 .கண் வங்கி , கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் . தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும் . 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும் .http :/ /ruraleye . org /
9 .பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது . மேலும் விபரங்கள் பெற 9916737471
10 . இரத்தப் புற்று நோய் : " Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது .
மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி :
East Canal Bank Road,
Gandhi Nagar , Adyar
Chennai - 600020
Land mark : மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044 - 24911526, 044 -22350241
இந்த கட்டுரை இணையத்தில்
இருந்து தொகுக்கப்பட்டவை .
Sunday, September 20, 2015
சந்திராஷ்டமம்
சந்திராஷ்டமம் என்றால் என்ன? அது என்ன செய்யும்?
சந்திராஷ்டமம் என்றால் என்ன, இதனைக் கணக்கிடுவது எப்படி, இந்த சந்திராஷ்டமம் என்ன செய்யும், இந்நாட்களில் சுபநிகழ்ச்சிகளை செய்யக்கூடாது என்கிறார்களே... என்று பலரும் பலவிதமான சந்தேகங்களைக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் பத்திரிகைகளில் ராசிபலனைப் படிக்கும்போதும், காலண்டர்களிலும் சந்திராஷ்டமம் என்ற வார்த்தையைப் பார்த்திருப்போம். அஷ்டமம் என்றால் எட்டு என்று அர்த்தம். சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் எட்டாவது ராசியில் சஞ்சரிக்கிறார் என்பது பொருள்.
பொதுவாக ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கின்ற கால அளவானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவின்படி சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் 2 1/4 நாட்கள் அதாவது, தோராயமாக 54 மணிநேரம் வாசம் செய்வார். இப்படி ஒவ்வொருவரின் ராசிக்கும் எட்டாவது ராசியில் சந்திரன் அமையும் காலத்தை சந்திராஷ்டம காலம் என்கிறார்கள்.
உதாரணத்திற்கு மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டமமாக இருக்கும். மொத்தம் 27 நட்சத்திரங்கள் என்பதால் கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு ஒருமுறை இதனை ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டி இருக்கும். சரி, இந்த சந்திராஷ்டமத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? சந்திரனை மனோகாரகன் என நிர்ணயம் செய்திருக்கிறார்கள். நமது மன நிலையை நிர்வகிப்பதே சந்திரனின் பணி. எட்டாம் இடம் அசுபமான பலன்களை உண்டாக்கக் கூடியது என்பதால் எட்டாம் இடத்திற்கு சந்திரன் வருகின்ற அந்தக் குறிப்பிட்ட 2 ¼ நாட்கள் டென்ஷனாக இருக்கும், அவ்வளவுதான். இதற்காக இவ்வளவு பில்ட் அப்- தேவையா?
மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்களுக்கும், எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களுக்கும் பிரச்னை இல்லை. மற்றவர்களுக்குத் தொல்லைதான். மனதில் குழப்பத்தினைத் தோற்றுவிக்கும்படியான நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடக்கும் என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்பதற்காக மாத ராசிபலன்களிலும், காலண்டர்களிலும் சந்திராஷ்டம நாட்களை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுகிறார்கள்.
‘பதறாத காரியம் சிதறாது’ என்று சொல்வார்கள். சந்திராஷ்டம நேரத்தில் ஒருவித பதட்டத்தோடு செயல்படுவோம், அதனால் ஈடுபடும் காரியங்களில் எளிதாக வெற்றி கிடைக்காது; அற்ப காரணங்களினால் இழுபறி உண்டாகும், இதனால் டென்ஷன் மேலும் அதிகரிக்கும், உடனிருப்பவர்களிடம் எரிந்து விழுவோம் அல்லது அவர்களின் எரிச்சலுக்கும் வசவுகளுக்கும் ஆளாவோம் - இவை சந்திராஷ்டம நாட்களில் ஏற்படக்கூடிய பொதுவான பலன்கள்.
மனித உடற்கூறு இயலைப் பொறுத்தவரை சந்திரன் நம் உடலில் ஓடுகின்ற ரத்தத்தைக் குறிக்கிறார். சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பதட்டத்தின் காரணமாக ரத்தம் சூடேறும். டென்ஷன் அதிகமாகும். ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் சந்திராஷ்டம நாட்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால்தான் திருமணம், க்ருஹப்ரவேசம் போன்ற சுபவிசேஷங்களில் சந்திராஷ்டம நாட்களை விலக்குகிறார்கள். வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு ஏற்கெனவே ஆனந்த டென்ஷன் இருக்கும். இதில் சந்திராஷ்டமத்தின் காரணமாகத் தோன்றும் பதற்றமும் இணைந்தால் என்னாவது? மணமக்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோருக்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்து திருமண நாளைக் குறிப்பதும் உண்டு.
அதுபோல அதிமுக்கியமான அறுவை சிகிச்சை செய்யவிருக்கும் மருத்துவர்களும், செய்யப்பட உள்ள நோயாளிகளும் தங்கள் சந்திராஷ்டம நாட்களைத் தவிர்த்து விடுவார்கள். மருத்துவர் அன்றைய தினத்தில் தனக்கு உண்டாகும் பதட்டத்தின் காரணமாக ஏதேனும் தவறு செய்து விடலாம்; நோயாளிக்கு ரத்த அழுத்தத்தில் தோன்றும் மாறுபாடு காரணமாக அறுவை சிகிச்சை தோல்வியில் முடியலாம் என்பதே இந்நாட்களை தவிர்ப்பதற்கான காரணம். சந்திராஷ்டம நாட்கள் டென்ஷனை உண்டாக்கும் என்பது சரி, அதற்காக அந்த நாட்களில் பணி ஏதும் செய்யாமல், வெளியில் போகாமல் முடங்கிக் கிடக்க முடியுமா? விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனிதருக்கும், உடனடியாக சிகிச்சை செய்தே தீரவேண்டிய மருத்துவருக்கும் சந்திராஷ்டம நாள் என்று சும்மா இருந்துவிட முடியுமா? இதற்கு பரிகாரம் ஏதும் கிடையாதா? நிச்சயமாக உண்டு.
சந்திரனுக்குரிய திரவமான பாலைக் குடித்துவிட்டு வேலையைத் துவக்கலாம். குளிர்ச்சியான பாதாம்பால் போன்றவையும் பதட்டத்தினைக் குறைக்கும். (முதலிரவில் மணமக்கள் பால் அருந்த வேண்டும் என்ற பழக்கத்தை நம்மவர்கள் வைத்திருப்பதும் இதற்காகத்தான்). சந்திராஷ்டம நாட்களை ஜோதிடர்கள் முன்னமேயே குறித்துக்கொடுப்பது கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அன்றி, பணி செய்யாமல் சும்மா இருப்பதற்காக அல்ல.
சந்திராஷ்டம நாட்கள் கெடுதல் பலன்களை மட்டும்தான் உண்டாக்கும் என்பது முற்றிலும் தவறு. ஒவ்வொரு ராசியினருக்கும் ஒருசில நன்மைகளையும் சந்திராஷ்டம நாட்களில் எதிர்பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசியினருக்கும் சந்திராஷ்டமம் எந்தெந்தவிதமான நற்பலன்களைத் தரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம் - சந்திரன் எட்டில் நீசம் பெற்ற நிலையில் இருந்தாலும், மறைமுக எதிரிகள் வலுவிழந்து போவார்கள். கடன்காரர்களின் தொல்லை இருக்காது. கூட்டாக செய்து வரும் தொழில்களில் லாபம் காணலாம். லாபம்தரும் தொலைதூர பிரயாணங்கள் செய்ய நேரிடும்.
ரிஷபம் - பிள்ளைகளின் வாழ்வில் முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்துகள் சேரும். தொழில் முறையில் கடுமையான அலைச்சல் இருந்தாலும், அதற்கான லாபம் நிச்சயமாகக் கிடைக்கும்.
மிதுனம் - பொதுவாக அதிக சிரமத்தினை சந்தித்தாலும் அடுத்தவர்களுக்கு உதவி செய்து புகழ் பெறுவர். கடும் பொருளிழப்பினை சந்தித்தாலும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தானம் செய்ய நேரிடும் என்பதால் மற்றவர்களிடையே மிகுந்த நற்பெயர் கிடைக்கும். கௌரவம் உயரும். பிள்ளைகளின் உத்யோகத்திற்கு அன்றைய தினம் செய்யும் உதவி நல்ல வெற்றியைத் தரும்.
கடகம் - வாழ்க்கைத் துணையின் பெயரில் சொத்துகள் சேரும். சொந்த பணிகளை விட வாழ்க்கைத் துணையின் செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். எதிரிகள் வலுவிழப்பார்கள். கடன்சுமை குறையும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். தொழில் ரீதியாக அலைச்சல் அதிகமானாலும் நல்ல லாபத்தினைக் காண்பர்.
சிம்மம் - சந்திராஷ்டமத்தால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்றபடி அதிக நன்மையைக் காண்பர். 12ம் இடத்திற் குடையவனான சந்திரன் எட்டாம் இடத்தில் அமர்வதால் அநாவசிய விரயங்களும், பொருளிழப்பும் தவிர்க்கப்படும். மறைமுக எதிரிகள் மறைந்து போவார்கள். வீண் அலைச்சல் குறையும். ஆன்மிகப் பயணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். மூத்த சகோதரருக்கு செய்யும் உதவி குறிப்பிடத்தகுந்த நன்மையை உண்டாக்கும்.
கன்னி - லாபத்தில் நஷ்டத்தினை சந்திக்க நேர்ந்தாலும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். போட்டியாளர்களின் தொல்லைகள் குறையும். வாழ்க்கைத் துணையின் உடன்பிறந்தோருக்கு உதவி செய்து நற்பெயர் அடைவர்.
துலாம் - துலாம் ராசியைப் பொறுத்தவரை சந்திராஷ்டம நாட்களில் சந்திரன் உச்சம் பெற்று இருப்பார். அன்றைய தினம் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்ற வகையில் மிகுந்த நன்மை காண்பர். தொழில் முறையில் சிறிது சிரமத்தினை சந்திக்க நேர்ந்தாலும் செய்யும் தொழிலில் நல்ல தனலாபம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். வாகனங்கள் மற்றும் பிரயாணங்களில் ஆதாயம் உண்டாகும்.
விருச்சிகம் - வீண்பழிகளை சுமக்க நேரிடுவதால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர்த்து நோக்கினால் போட்டியாளர்கள் வகுக்கும் திட்டங்களைப் புரிந்துகொள்வர். அன்றைய தினத்தில் செயல்பட முடியாது போனாலும் வெற்றிக்காண வழிகளை அறிந்து கொள்ள முடியும். பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் உயரும். கடன் சுமைகள் குறையும்.
தனுசு - செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் உண்டாகுமே தவிர வேறு பாதிப்புகள் ஏதும் நேராது. கூட்டுத்தொழிலில் நல்ல தன லாபம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் பெயரில் சொத்துகள் சேரும். தொழில் முறையில் சிறப்பான தனலாபத்தினைக் காண்பர். நலிந்தவர்களுக்கு உதவி செய்து நற்பெயரை அடைவர்.
மகரம் - வாழ்க்கைத் துணையின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கூட்டுத்தொழில் நன்மை தரும். எதிரிகளால் உண்டாகும் போட்டினைச் சமாளித்து வெற்றி காணும் திறன் உண்டாகும். ஆன்மிக சிந்தனைகள் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும்.
கும்பம் - சந்திராஷ்டமத்தினால் அதிக நன்மை அடைபவர்கள் இவர்களே. ஆறாம் இடத்திற்குரியவர் எட்டில் அமர்வதால் ஆறாம் இடம் வலுவிழந்து போகும். எதிரிகள் வலுவிழப்பார்கள். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமான முடிவினைத் தரும். கடன்சுமை குறையும். நோய்களின் தாக்கம் குறையும். தொழில் முறையில் அதிக அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் குறிப்பிடத்தகுந்த தனலாபம் உண்டாகும்.
மீனம் - பிள்ளைகளின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். கூட்டு முயற்சிகள் வெற்றியைத் தரும். குடியிருக்கும் வீட்டில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வர். கடன்சுமை குறையும். வாழ்க்கைத் துணையின் பணியில் இவர்கள் செய்யும் உதவிகள் நல்ல தனலாபத்தினைப் பெற்றுத் தரும். தொழில் முறையில் இருந்து வந்த சந்தேகங்கள் விலகும். இப்படி சந்திராஷ்டம நாட்களில் 12 ராசிக்காரர்கள் பல நன்மைகளும் நடப்பதை அனுபவ பூர்வமாகக் காண இயலும். மன உளைச்சலைத் தரும் நாட்கள் அவை என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு உங்கள் செயல்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். சந்திராஷ்டமம் குறித்து எந்தவிதத்திலும் பயம் கொள்ளத் தேவையில்லை