Apple நிறுவனத்தால் Android சாதனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது செயலி.
Android இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துவரும் இன்றைய நிலையில்
மைக்ரோசாப்ட் , பேஸ்புக் , யாகூ போன்ற பெரும் பெரும் நிறுவனங்கள் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தத்தமது செயலிகளை Android சாதனங்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த வரிசையில் தற்பொழுது Apple நிறுவனமும் Android சாதனத்துக்கான ஒரு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது Move to iOS எனும் செயலி ஆகும்.
Android சாதனத்தில் இருந்து
iOS சாதனத்தை பயன்படுத்த துவங்கியவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த செயலியானது, தாம் ஏற்கனவே பயன்படுத்திய Android சாதனத்தில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், குறுஞ்செய்திகள் (Messages) , மின்னஞ்சல் கணக்குகள், நாட்காட்டி குறிப்புகள் மற்றும் Contacts, Web bookmarks போன்றவைகளை ஐபோன் சாதனத்துக்கு மாற்றிக் கொள்ள உதவுகிறது.
இந்த செயலியின் மூலம் குறிப்பிட்ட இரு Android, iOS சாதனங்களுக்கு இடையில் உருவாக்கப்படும் பாதுகாப்பான WiFi வலையமைப்பு மூலம் தரவுகள் பரிமாற்றப்படும்.
எனினும் Android இராஜ்யத்திற்கு முதன் முதலாக பிரவேசித்த இந்த செயலியானது Apple நிறுவனத்திற்கு பாரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.
அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே Android பயனர்களின் எதிர்மறையான கருத்துக்களால் Google Play Store இல் ஐந்துக்கு 1.8 எனும் தரத்தையே பெற முடிந்துள்ளது.
எது எப்படியோ நீங்களும் இதனை பயன்படுத்தி பார்க்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
https://play.google.com/store/apps/details?id=com.apple.movetoios
No comments:
Post a Comment